பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 1 Feb 2021 2:44 AM GMT (Updated: 1 Feb 2021 2:44 AM GMT)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் படி எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலையில் இன்று (பிப்.1)  எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையான  பெட்ரோல், லிட்டர் 88.82 ரூபாய், டீசல் லிட்டர் ரூ.81.71 -க்கே இன்றும் விற்பனையாகிறது.


Next Story