மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்


மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 1 Feb 2021 2:32 PM GMT (Updated: 1 Feb 2021 2:32 PM GMT)

மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா சூழநிலைகளுக்கு மத்தியில் 2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் 

அதில் சுகாதாரத்துறைக்கு 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, பிரதமரின் சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் 64,180 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும், நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 1.41 லட்சம் கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய வாகனங்கள் திரும்பப்பெறும் கொள்கை அறிமுகம், காப்பீட்டுத்துறையில் அந்திய நேரடி முதலீடு 49-ல் இருந்து 74  சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது போன்ற இடம் பிடித்திருந்தன.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன என்றும் கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Next Story