இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றும் தமிழக அரசு உறுதி - கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை


இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றும் தமிழக அரசு உறுதி - கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை
x
தினத்தந்தி 2 Feb 2021 6:11 AM GMT (Updated: 2 Feb 2021 1:47 PM GMT)

கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் கூறியதாவது:-
  • தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்
  • கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது
  • அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்
  • தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது
  • முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை காட்டுகிறது
  • கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது
  • மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி. 
  • கொரோனா தடுப்பில் தமிழக காவல்துறை சிறப்பாக பணியாற்றியுள்ளது.
  • காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் விரைவில் தொடங்கும்
  • தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
  • தமிழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது
  • ஆழ்கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது
  • இந்திய அளவில் தமிழகத்தில் அதிக முதலீடு திட்டங்கள் ஈர்ப்பு
  • அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும். 


Next Story