ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது ஏன்? மு.க ஸ்டாலின் பேட்டி


ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது ஏன்?  மு.க ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 2 Feb 2021 6:58 AM GMT (Updated: 2 Feb 2021 9:09 AM GMT)

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையாற்ற தொடங்கியதும் அவரது உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. வெளிநடப்பு செய்த பின்  எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

அதிமுக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை என்பது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் கவர்னர் முடிவு எடுக்கவில்லை. இதனால் தான் கவர்னர் உரையை புறக்கணித்தோம். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார். 

Next Story