முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2021 7:27 AM GMT (Updated: 4 Feb 2021 7:27 AM GMT)

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து, 3-வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நடைபெற்று வருகிறது. 

அப்பொழுது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், 

இன்னும் ஓரிரு வாரங்களில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர்,  அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு விரைவில் கொரொனா தடுப்பூசி போடப்படும்.

இதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சாதகமான பதில் வரும்.சாதகமான பதில் வந்ததும் 50 வயதுக்கு மேற்பட்டோர், பத்திரிக்கையாளர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்படும். 
தமிழகத்தில் இதுவரை 1,33,000 பேருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story