அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு? விரைவில் அறிவிப்பு


அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு? விரைவில் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2021 10:20 AM GMT (Updated: 4 Feb 2021 10:20 AM GMT)

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதொடர்பான அறிவிப்பை நாளை வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில்  முதல்வர் பழனிசாமி அறிவிக்கலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்கான கோப்புகள் தற்போது முதல்வர் பழனிசாமியிடம் இருப்பதாகவும்  விரைவில் கையெழுத்தாகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த வயது வரம்பு, கரோனா காலத்தில், கடந்த ஆண்டு 59 ஆக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு இது 60 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story