மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் - முதல்-அமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு


மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் - முதல்-அமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Feb 2021 5:04 AM GMT (Updated: 7 Feb 2021 5:04 AM GMT)

மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் என்று முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினார்.

சென்னை,

சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் பழனிசாமி சென்னை போரூரில் பேசியதாவது:-

மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். திமுக நிறைவேற்றாத பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

நான் சொல்வதைத்தான் முதல்-அமைச்சர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் நான் செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார். திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. கடைசிவரை திமுக சொல்லிக்கொண்ட இருக்கப்போகிறது. சொல்லும் இடத்தில் அதிமுக இருக்கப்போகிறது.

விவசாயிகள் படும் சிரமங்கள் எனக்குத்தெரியும் என்பதால் விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதான் அதிமுக அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story