மாநில செய்திகள்

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் - ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேச்சு + "||" + I will get involved in serious politics - Sasikala speech among supporters

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் - ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேச்சு

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் - ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேச்சு
தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் விரைவில் எல்லோரையும் சந்திப்பேன் என்றும் ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி, 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார். தற்போது தண்டனை காலத்தை முடித்துக் கொண்டு சசிகலா சென்னை வந்துகொண்டிருக்கிறார். தற்போது கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அருகே வந்து கொண்டிருக்கிறார். அங்கு அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கிருஷ்ணகிரியில் ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசினார். மேலும் அன்புக்கு நான் அடிமை; கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றுமே அடிபணிய மாட்டேன். மிக விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன், அப்போது சொல்கிறேன்” என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் - டிடிவி தினகரன்
சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2. அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு - மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவிப்பு
அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணை, மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3. அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா ? - "கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க...!- சசிகலா
அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்
4. ‘அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது’ - டி.டி.வி.தினகரன்
அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
5. குக்கரை தலையில் சுமந்தபடி சசிகலாவை வரவேற்க மொபட்டில் சென்னை செல்லும் தொண்டர்
குக்கரை தலையில் சுமந்தபடி சசிகலாவை வரவேற்க மொபட்டில் தொண்டர் ஒருவர் சென்னை செல்கிறார்.