மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்து துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையம் வந்த அண்ணன்-தம்பி + "||" + The brother-in-law who came to the police station with the severed head after murdering a boy near Nellai

நெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்து துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையம் வந்த அண்ணன்-தம்பி

நெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்து துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையம் வந்த அண்ணன்-தம்பி
நெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்த அண்ணன்-தம்பி துண்டிக்கப்பட்ட அவரது தலையுடன் வந்து போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
வாலிபர் படுகொலை
நெல்லை அருகே தாழையூத்து பூலித்தேவன் நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சிதம்பர செல்வம் என்ற கோழி (வயது 23), கூலி தொழிலாளி. இவர் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய உறவினர்களான முருகன் மகன்கள் பாலாஜி (39), ராமையா (37) ஆகியோருடன் அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாலாஜியின் குடும்பத்தினரைப் பற்றி சிதம்பர செல்வம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் சிதம்பர செல்வத்தின் கழுத்தில் சரமாரியாக வெட்டினர். மேலும் ஆத்திரம் தீராத அவர்கள், ஆட்டை அறுப்பது போன்று சிதம்பர செல்வத்தின் கழுத்தை அறுத்தனர். இதில் தலை துண்டிக்கப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தலையுடன் போலீசில் சரண்
படுகொலை செய்யப்பட்ட சிதம்பர செல்வத்தின் தலையை தனியாக துண்டித்து எடுத்த பாலாஜி, ராமையா இருவரும், அந்த தலையுடனும், ரத்தம் தோய்ந்த அரிவாள்களுடனும் தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரும் சிதம்பரசெல்வத்தின் தலையை அவரது உடல் இருந்த இடத்திலேயே வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட சிதம்பரசெல்வத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான பாலாஜி, ராமையா ஆகிய 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. நெல்லையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
நெல்லையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) 5 சட்டசபை தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.
4. சிறுவனை தத்தெடுத்த போலீஸ் நிலையம்
குடும்பத்தை பிரிந்து தனிமையில் தவித்த 14 வயது சிறுவனை போலீஸ் நிலையமே தத்தெடுத்திருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது.
5. நெல்லையில் கல்லூரி பேராசிரியர்களுடன் ராகுல் காந்தி உரையாடல்
நெல்லையில் கல்லூரி பேராசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.