பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி


பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 9 Feb 2021 7:24 AM GMT (Updated: 9 Feb 2021 7:24 AM GMT)

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வேலூர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் 110-விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. மேலும் விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கைனூரில் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரச்சாரத்தில் கூறியதாவது:-

வெயில், மழை என்று உழைக்கும் விவசாயிகள் 16 லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் வார்த்த அரசு அதிமுக அரசு. விவசாய கடன் ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு இது. தமிழ்நாடு முழுவதும் 95 சதவிகிதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Next Story