மாநில செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 3-ஆம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு + "||" + Announcement of the 3rd phase tour of DMK leader MK Stalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 3-ஆம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 3-ஆம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு
வருகின்ற 12-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தின் 3-ஆம் கட்ட பயணத்தை ஸ்டாலின் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் 2 கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார்.

இந்நிலையில் 3-வது கட்டமாக மு.க.ஸ்டாலின் 9 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 

இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் 3-வது கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். அன்று காலை 8 மணிக்கு விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட குப்பம் ஊராட்சி, காணை, விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்கிறார்.

மதியம் 1 மணிக்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருச்சி நெடுஞ்சாலை, உளுந்தூர்பேட்டையில் பிரசாரம் செய்கிறார்.

13-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கடலூர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கலைஞர் திடல், பெரியார் நகர், விருத்தாசலம் நெடுஞ்சாலை, ராணி மஹால் எதிரில், விருத்தாசலம் ஆகிய இடங்களிலும், மதியம் 1 மணிக்கு கடலூர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம் பைபாஸ், சிதம்பரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நாகை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கலைஞர் அரங்கத்திலும், தஞ்சை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருக்கடையூர் மெயின் ரோடு, பூம்புகாரிலும், மதியம் 1 மணிக்கு திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதாபராமபுரம் ஊராட்சி யிலும், நாகப்பட்டினம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வேளாங்கண்ணி- வேதாரண்யம் சாலை, கீழையூர் ஒன்றியம், கீழ் வேளூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்கிறார்.

15-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஊனையூர், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருமயம் ஆகிய இடங்களிலும் மதியம் 1 மணிக்கு அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லாபுரம், பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர் ஆகிய இடங்களிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு - தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.