தமிழகம் முழுவதும் புதிதாக 46 ‘சைபர் கிரைம்’ போலீஸ் நிலையங்கள் தொடக்கம்


தமிழகம் முழுவதும் புதிதாக 46 ‘சைபர் கிரைம்’ போலீஸ் நிலையங்கள் தொடக்கம்
x
தினத்தந்தி 9 Feb 2021 9:30 PM GMT (Updated: 9 Feb 2021 8:49 PM GMT)

தமிழகம் முழுவதும் புதிதாக 46 ‘சைபர் கிரைம்’ போலீஸ் நிலையங்கள் தொடக்கம் அரசு உத்தரவு.

சென்னை, 

சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் போலீஸ் பிரிவு தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சென்னையில் மத்திய குற்றப்பிரிவிலும், மாநில அளவில் சி.பி.சி.ஐ.டி. போலீசிலும் சைபர் கிரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வந்தது. சென்னையில் 12 துணை கமிஷனர் சரகங்களிலும் தனித்தனியாக சைபர் கிரைம் போலீஸ் பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் 46 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் புதிதாக தொடங்கப்படுகிறது. 36 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும், சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்படுகிறது.

மேலும் சென்னை, கோவை, சேலம், திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை போன்ற நகரங்களிலும் தனித்தனி சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களும், பொருளாதார குற்றப்பிரிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுகளிலும் சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் சைபர் குற்றங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story