மாநில செய்திகள்

"திமுக, அமமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவர்" - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + "People will teach a lesson to DMK and AMMK" - Minister Jayakumar

"திமுக, அமமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவர்" - அமைச்சர் ஜெயக்குமார்

"திமுக, அமமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவர்" - அமைச்சர் ஜெயக்குமார்
திமுக, அமமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் உய்யாலிகுப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

அதன் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:- 

அமமுக என்பது அதிமுக மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதாகவுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சி. ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள். அமமுகவை தொடங்கி கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதால் அவர்களுக்கு ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை என சசிகலா குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

திமுக, அமமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூடி பேசும் நிலை வரும். அதனால், கூட்டணி பொறுத்தளவில் எந்த பிரச்னையும் இல்லை, கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. மேலும் சில கட்சிகள் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு வரும் நிலை உள்ளது. எந்த கூட்டணி அமைந்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த முடியாது

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
2. திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன்; அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
தேர்தலையொட்டி திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லனாகவும் உள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
3. தி.மு.க. தேர்தல் அறிக்கை: மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்
திமுக தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிடுகிறார்.
4. திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
5. திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை
திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.