கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிப்பில்லை - தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Feb 2021 10:17 AM GMT (Updated: 11 Feb 2021 10:17 AM GMT)

கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிப்பில்லை என்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

புதுடெல்லி, 

கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிப்பில்லை என்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். 

மாநிலங்களவையில் இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு எப்படி உதவப் போகிறது. நிதியமைச்சர் ஒரு முயற்சி செய்துள்ளார். அது ஏதேனும் பலனைத் தருமா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகள் பட்ஜெட்டால் எந்த பயனும் அடையவில்லை. மத்திய அரசின் இந்த பட்ஜெட் யு.எஸ் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவுக்கான தேவைகளை கவனியுங்கள். மத்திய அரசாங்கம் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும். 50 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உருவாக்கிய சொத்துக்களை மத்திய அரசு விற்கிறது” என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

Next Story