அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் - கமல்ஹாசன் + "||" + We must work to bring about change against the AIADMK and DMK regime - Kamal Haasan
அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் - கமல்ஹாசன்
அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பான தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட அனைத்து முடிவையும் எடுக்க தலைவர் கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை வானகரத்தில் நடந்த மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள், மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும். எனது இரு மகள்களும் பொதுக்குழுவிற்கு வருவதாக கூறினார்கள். ஆனால் வாரிசு அரசியலாக எனது கட்சி மாறி விடக்கூடாது என்பதால்தான் நான் மறுத்துவிட்டேன் என்று அவர் கூறினார்.
கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றையும் அதிமுக தொண்டர்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிமுக, பாமக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.