பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி 14 ஆம் தேதி சென்னை வருகை


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 11 Feb 2021 2:46 PM GMT (Updated: 11 Feb 2021 2:46 PM GMT)

மெட்ரோ ரெயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி 14 ஆம் தேதி சென்னை வருகை தருகிறார்.

சென்னை

வருகிற 14 ஆம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே இருக்கப்போவதாக பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி காலை 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை10.35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

 நேரு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மெட்ரோ ரெயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். 11.15 மணியில் இருந்து 12.30 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி முடிந்ததும் 12.50 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் தளத்துக்கு காரில் செல்கிறார். பிறகு சென்னை விமான நிலையத்துக்கு 1.30 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்றடைந்ததும் தனி விமானம் மூலம் 1.35 மணிக்கு கொச்சி செல்கிறார். 14-ந்தேதி சென்னையில் பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   


Next Story