அமமுக - அதிமுக இணைப்பு என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி


அமமுக - அதிமுக இணைப்பு என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
x
தினத்தந்தி 13 Feb 2021 8:35 AM GMT (Updated: 13 Feb 2021 8:35 AM GMT)

பிரதமர் மோடி ஆட்சியில், தமிழகத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் நரேந்திர மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால், பிரதமர் மோடியின் வருகை அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வருவது அரசு நிகழ்ச்சிக்காக மட்டுமே, அதில் அரசியல் குறித்து பேசப்படாது என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி ஆட்சியில், தமிழகத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் பாஜகவுக்கு ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., கூட கொடுக்கவில்லை; இது நியாயமா? அமமுக - அதிமுக இணைப்பு என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம்” என்றார். 

Next Story