தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்
x
தினத்தந்தி 14 Feb 2021 3:13 AM GMT (Updated: 14 Feb 2021 3:13 AM GMT)

தமிழகத்தில் நேற்று 628 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 73 ஆயிரத்து 966 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று 628 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 73 ஆயிரத்து 966 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 11 ஆயிரத்து 900 சுகாதாரப்பணியாளர் மற்றும் 3 ஆயிரத்து 350 முன்கள பணியாளர்கள், 4 ஆயிரத்து 292 போலீசார் என மொத்தம் 19 ஆயிரத்து 632 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்தும், 294 சுகாதாரப்பணியாளர்கள், ஒரு முன்கள பணியாளர் மற்றும் 105 போலீசார் என மொத்தம் 400 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பு மருந்தும் என நேற்று மொத்தம் 20 ஆயிரத்து 32 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது.

அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 934 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், 4 ஆயிரத்து 438 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசி என 2 லட்சத்து 47 ஆயிரத்து 372 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு முதல் முறையாக நேற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story