சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் - துரைமுருகன் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Feb 2021 4:01 PM GMT (Updated: 15 Feb 2021 4:01 PM GMT)

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட பிப்.17ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. அதிமுக, மக்கள் நீதி மையம் கட்சிகளில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 17-ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பங்களை ரூ1,000 கட்டணம் செலுத்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெற்று கொள்ளலாம். பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ25,000 கட்டணமாக செலுத்த வேண்டும். தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் மற்றும் பெண்கள் ரூ15,000 கட்டணமாக செலுத்த வேண்டும். வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Next Story