2009- மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


2009- மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 5:20 AM GMT (Updated: 16 Feb 2021 5:20 AM GMT)

2009- மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை,

கடந்த, 2009- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அ.தி.மு.க., சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர். இதில், 3,354 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், சிதம்பரம் வெற்றி பெற்றார். 

சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன், தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.10 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த வழக்கை, இறுதியில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், 2020 அக்டோபரில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்திருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என்று தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 

Next Story