2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் ஐகோர்ட்டு தீர்ப்பு


2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Feb 2021 2:45 AM GMT (Updated: 17 Feb 2021 2:45 AM GMT)

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் போட்டியிட்டார். இந்த தேர்தலில், 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றார்.

சென்னை,

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் போட்டியிட்டார். இந்த தேர்தலில், 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு கடந்த 11 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். ப.சிதம்பரம், ராஜ கண்ணப்பன், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் சாட்சியங்கள் அளித்தனர். அவர்களிடம் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி நேற்று காலையில் பிறப்பித்தார். அதில், நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என்றும், அவரது வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


Next Story