மாநில செய்திகள்

சாலை விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல் + "||" + 5 female workers killed in road accident: MK Stalin's condolences

சாலை விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சாலை விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்
சாலை விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

நெல்லையில் இருந்து விவசாய பணிக்காக சரக்கு வாகனத்தில் சென்ற பெண் தொழிலாளர்கள் 5 பேர் மணியாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்து இருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படும் ஏழை தொழிலாளர்களின் அவல நிலை தொடர்கிறது.

உயிர் இழந்த பெண் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின்கம்பியில் உரசியதால் மின்தடை- நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்
சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின் கம்பியில் உரசியதால் மின்தடை ஏற்பட்டது. நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்.
2. அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் சாவு- நண்பர் படுகாயம்
அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
3. விபத்தில் வாலிபர் சாவு
நெல்லையில் விபத்தில் வாலிபர் பலியானார்.
4. இப்படி சிக்கி விட்டதே...!
காரைக்குடி மண்சாலையில் சரக்கு லாரியின் பின்சக்கரம் விபத்துக்குள்ளாகி சிக்கி கொண்டது.
5. சாலையோரம் அறுந்து தொங்கும் வயர்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
அரியலூரில் சாலையோரம் அறுந்து தொங்கும் வயர்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.