மே 3ம் தேதி முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு; தமிழக அரசு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Feb 2021 4:32 AM GMT (Updated: 17 Feb 2021 12:51 PM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்தையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

பொதுத்தேர்வு நடைபெறும் தேதி எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு பொதுதேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.  இதன்படி, வரும் மே மாதம் 3 ஆம் தேதி  துவங்கும் பொதுத்தேர்வு 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
  • மே 3- மொழித்தாள், 
  • மே 5- ஆங்கிலம்
  • மே 7: கணிணி அறிவியல், உயிரி அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள்
  • மே 11- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் 
  • மே 17- கணிதம், விலங்கியல் 
  • மே19- உயிரியியல் வரலாறு 
  • மே 21- வேதியியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்
காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 

Next Story