தங்கம் விலை சவரனுக்கு ரூ.384- குறைந்தது


தங்கம் விலை சவரனுக்கு ரூ.384- குறைந்தது
x
தினத்தந்தி 17 Feb 2021 9:28 AM GMT (Updated: 17 Feb 2021 9:28 AM GMT)

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது.


தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 712-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 464 ஆக இருந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.384 குறைந்து ரூ.35 ஆயிரத்து 328-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.64 குறைந்து ரூ.4 ஆயிரத்து 416 ஆக உள்ளது.

கடந்த 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் தங்கம் விலை குறைந்தது. இதனால் தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின் விலையில் உயர்வு காணப்பட்டு தற்போது ஏற்ற-இறக்கம் காணப்பட்டு வருகிறது.

புதன்கிழமை விலை நிலவரம்
  • 1 கிராம் தங்கம் விலை- ரூ. 4,416
  • 1 சவரன் தங்கம் விலை ரூ. 35,328
  • 1 கிராம் வெள்ளி விலை ரூ. 74.10
  • 1 கிலோ வெள்ளி விலைரூ. 74,100

Next Story