திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Feb 2021 3:28 PM GMT (Updated: 17 Feb 2021 3:28 PM GMT)

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் தனது 6-வது கட்ட தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.  

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்பட்டார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே திமுக அராஜகத்தில் ஈடுபடுகிறது. ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது

தமிழக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய கட்சி அதிமுக தான். சட்டம் - ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த திட்டமும் செய்யவில்லை என திமுக குற்றசாட்டி வருகிறது. ஆனால் மத்தியில் இருக்கும் அரசு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு விலையில்லா கால்நடைகள் வழங்கப்பட்டு வருகிறது. 
 
ஆழ்வார் திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் பகுதியில் உயர்மட்ட பாலமும், பெரிய தாழையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவும் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார். 

Next Story