‘ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்


‘ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Feb 2021 4:17 AM GMT (Updated: 18 Feb 2021 4:17 AM GMT)

‘ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2019-ம் ஆண்டு கேரள மாநிலத்தில், அம்மாநில அரசால் படுகொலை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த செயல்பாட்டாளர் மணிவாசகத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் கோ.சீனிவாசன், அனுப்பூர் செல்வராஜ், தர்மபுரி சித்தானந்தம் ஆகியோரை கொடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஒருவரது இறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்கான உரிமையையே மறுத்து, அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமைகளாக வரையறுத்து வழங்கியுள்ளவற்றிற்கே எதிராக, இறுதி நிகழ்வில் பங்கேற்றதற்காக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நிர்வாகிகளை ‘ஊபா’ எனும் ஆட்தூக்கிச் சட்டத்தில் கைது செய்து சிறைப்படுத்தி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கைது செய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நிர்வாகிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story