மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு + "||" + Petrol and diesel prices rise again today

பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு
பெட்ரோல் டீசல் விலை ஏறத்தாழ ஒருவார காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப்பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது.

இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வடைந்தது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 92.25 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து 85.63 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யத்தில் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிப்பு திருவிழாவுக்கு தடையால் பூ விலை வீழ்ச்சி
வேதாரண்யத்தில் பனிப்பொழிவால் முல்லைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்டதால் பூ விைல வீழ்ச்சி அடைந்துள்ளது.
2. ஏப்ரல் 14: இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்
சென்னையில் 15-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58க்கும் டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
3. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் கடந்த 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது.