மாநில செய்திகள்

தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம் + "||" + I am not the only one who comes when the election comes Stalin's propaganda

தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்

தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்
தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான், எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் என்று மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
கோவை,

தமிழகத்தில் சட்டப்பேரவை நெருங்கி வரும் சூழலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மக்கள் கிராம சபை மூலம் மக்களை மாவட்டவாரியாக சந்தித்து வந்த ஸ்டாலின் தற்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் நேற்று முன்தினம் மதுரையில் 4 ஆம் கட்ட பிரசாரத்தை தொடங்கிய அவர் இன்று கோவையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கோவை சிங்காநல்லுரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட அவர் பேசியதாவது:-

தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான், எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன்.பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தால் விரைவில் செஞ்சுரி அடிக்கும். 

மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆட்சிகள் மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ஊர்களிலும், அதிமுகவினர் ரவுடியிஸத்தை ஒடுக்குவதே முதல் வேலை என்றார்.