சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம்.
ஓ பன்னீர் செல்வம் ராமர் அருகில் பரதனாக இருக்க வேண்டியவர். தற்போது ராவணன் அருகில் இருக்கிறார். அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்” என்றார்.
கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றையும் அதிமுக தொண்டர்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிமுக, பாமக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.