மாநில செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் + "||" + ADMK to hold 4 days in Tamil Nadu on Jayalalithaa's birthday Public meeting

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை ஆர்.கே.நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பேசுகிறார்கள்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த, ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 24, 28-ந் தேதிகளிலும், மார்ச் 1 மற்றும் 2-ந் தேதிகளிலும் என மொத்தம் 4 நாட்கள் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும்; கட்சி அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

உருவச்சிலைக்கு மரியாதை
மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கட்சி தலைமையால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந் தேதி ஆங்காங்கே ஜெயலலிதாவினுடைய உருவச்சிலைக்கு அல்லது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தற்காப்பு நடவடிக்கை
அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள் மற்றும் இன்னபிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறும் வகையில், அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

24-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பேசுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்
2. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
3. சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரது வாழ்நாள் சாதனைகளை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
4. ஜெயலலிதா பிறந்தநாளில் தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் உறுதிமொழி ஏற்போம் தொண்டர்களுக்கு, டி.டி.வி.தினகரன் அழைப்பு
தி.மு.க.வை தலையெடுக்கவிடாமல் செய்து, புதிய விடியலை ஏற்படுத்திட உறுதி ஏற்றிடுவோம் என்று தொண்டர்களை டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
5. இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-