கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2021 6:27 AM GMT (Updated: 21 Feb 2021 6:27 AM GMT)

கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக  வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும்,  தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனுர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. கடலூரில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணி, செய்யார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரி, காலாப்பேட், கனகசெட்டிக்குளம், வில்லியனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக, காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடலூா், விழுப்பும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (பிப்.21, 21) ஆகிய இரு நாட்களும் இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும்.

பிப்ரவரி 23,24 -ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரிஸ காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story