மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலத்தில் பயங்கரம்; கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை + "||" + murder

சத்தியமங்கலத்தில் பயங்கரம்; கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை

சத்தியமங்கலத்தில் பயங்கரம்; கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை
சத்தியமங்கலத்தில் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

சத்தியமங்கலத்தில் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவில்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலின் பூசாரியாக கோபால் என்பவர் உள்ளார். 
இந்த கோவிலுக்கு திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று காலை 5.45 மணி அளவில் கோவிலில் பூஜை செய்வதற்காக பூசாரி கோபால் வந்து உள்ளார். 

கொலை
அப்போது கோவிலின் கதவு அருகே ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். இறந்தவருக்கு 22 வயது இருக்கும் என்பதும், அவரை யாரோ தலையில் கல்லால் தாக்கி கொன்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. மேலும் இறந்து கிடந்தவரின் அருகில் தண்ணீர் பாட்டில், மழைக்கோட்டு, துணி கொண்டு செல்லும் பேக் மற்றும் துணிகள் அங்கு கிடந்ததையும் கண்டனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் இறந்துகிடந்தவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். பின்னர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனிப்படை
மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து நாய் வீரா மோப்பம் பிடித்தபடி அருகில் உள்ள ராஜீவ்நகர் பிரிவு வரை ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.