புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்


புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ  வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்
x
தினத்தந்தி 22 Feb 2021 11:22 AM GMT (Updated: 22 Feb 2021 11:22 AM GMT)

புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனது பெருமான்மையை இழந்ததால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. சபாநாயகர் சிவக்கொழுந்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்ததுதான் இதற்கு காரணம். அதோடு கூட்டணி கட்சியான  திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும் ராஜினாமா செய்தது அரசுக்கு பின்னடைவாக அமைந்தது. 

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்த நிலையில்,  புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ  வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளார். 

கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வெங்கடேசன் இடைநீக்கம் செய்யப்படுவதாக  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Next Story