அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது-முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது-முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி  கூறினார்.
x
தினத்தந்தி 22 Feb 2021 4:30 PM GMT (Updated: 22 Feb 2021 4:30 PM GMT)

அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது என சேலம் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்

 சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக பூத்கமிட்டி மகளிரணி ஆலோசனைக் கூட்டம் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தமிழக முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவத:-

இந்த கூட்டத்தில் உங்களது குடும்பத்தில் ஒருவராக இருக்கும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சகோதரரை பார்க்க ஆவலோடு கூடி இருப்பது அதிமுகவில் மட்டுமே. இந்த கூட்டம் போதும் வருகிற தேர்தலில் நாம் வெற்றியடைய. அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது. நீங்கள் முழுமனதுடன் முனைப்பாக செயல்பட வேண்டும். 

2016-ல் ஜெயலலிதா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு அனைத்தையும் செய்து கொடுத்துள்ளது. சொல்வதை செய்கிற அரசாக திகழ்ந்து வருகிறது. உள்ளாட்சியிலே மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தருவதாக ஜெயலலிதா அறிவித்து மறைந்தாலும் அவருடைய கனவை தமிழக அரசு செய்து காட்டியுள்ளது என கூறினார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோடு பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் ₹1022 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் விலங்கின ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 73.80 ஏக்கர் பரப்பளவில் ₹118 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் அதை சார்ந்த அலுவலக கட்டிடங்களை தமிழக முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதில், நிர்வாக அலுவலகம், கல்விசார் வளாகம், நூலக கட்டிடம், விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடை பண்ணை வளாகம், விருந்தினர் மாளிகை, உணவகம், கால்நடை மருத்துவமனை கட்டிடங்கள் திறக்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் ராமன், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலை தனி தாலுகாவாக அறிவித்து புதிய வருவாய் கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் தந்தார்.மாணவர்கள் படித்து முடித்த பின்னர் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்க வேண்டும்.சேலம், தேனி, உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியை பெருக்க கலப்பின பசுக்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.கலப்பின பசுக்களை உருவாக்க ரூ.100 கோடி மதிப்பில் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்படும்,'என கூறினார்.

Next Story