மாநில செய்திகள்

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் + "||" + Deputy Chief Minister Panneer Selvam worshiped at the Ganesha Temple before the budget was tabled

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம்

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. இதில் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண்மை, சுகாதாரம், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வருவதற்கு முன்பாக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார். அவருடன் அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் வழிபாடு செய்தனர். துணை முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான பன்னீர்செல்வம், தமிழக பட்ஜெட்டை 10-வது முறையாக தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.