மாநில செய்திகள்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2021-2022 இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் + "||" + Filed by Deputy Chief Minister O. Panneerselvam 2021-2022 of the Interim Budget Key Features

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2021-2022 இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2021-2022 இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2021-2022 இடைக்கால படஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
சென்னை

சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மத்திய அரசால் வழங்கப்படும் நல் ஆளுமை திறன் பட்டியலில் தமிழக அரசு முதலிடம் பிடித்துள்ளதாகவும், தனியார் பத்திரிகையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒட்டு மொத்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து 3-ம் ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த இடைக்கால படஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கொரோனா பெருந்தோற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

அம்மா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டம் குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு, நிரந்தர இயலாமைக்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு.

காவல்துறைக்கு ரூ.9,567.93 கோடிய் ஒதுக்கீடு.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 436.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நீதித் துறைக்கு 1,437.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

நீதித்துறை நிர்வாகத்துறையில் புதிய நீதிமன்ற கட்டடங்களை கட்டுவதற்காக ரூ.289.78 கோடி ஒதுக்கீடு.

வேளாண் துறைக்கு 11982.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மீன்வளத்துறை 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீன்வளத்துறைக்கான மூலதன செலவினங்கள் ரூ.580.97 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது!.

நெடுஞ்சாலை துறைக்காக ரூ.6,023.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 19,420.54 கோடி ஒதுக்கீடு.

புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு ரூ.2,470.93 கோடி ஒதுக்கீடு, மினி கிளினிக்குகளுக்காக ரூ.144 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வித்துறைக்காக மொத்தம் ரூ.5,478.19