மாநில செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Today petrol and diesel price situation in Chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது.

இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. 

இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.90-க்கும் டீசல் சிலை லிட்டர் ரூ.86.31-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டியல்-பழங்குடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்; சென்னையில் 26-ந் தேதி நடக்கிறது
பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்து பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.
2. சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஏப்ரல் 20: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரின் கதி என்ன? கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை
கடத்தப்பட்ட சென்னை ரியல் எஸ்டேட் அதிபரின் கதி என்ன? என்று சிக்கிய கார் டிரைவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.