மாநில செய்திகள்

இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள் + "||" + Edappadi Palanisamy and Open Water Selvam wear evening attire for Jayalalithaa statue

இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள்

இன்று 73-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள் விருப்பமனு வினியோகத்தையும் தொடங்கி வைக்கிறார்கள்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான 24-ந்தேதி (இன்று), சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இதை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் 4 நாட்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை ஆர்.கே.நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பேசுகிறார்கள்.
2. ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு; ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதா நினைவு இல்லத்தை பார்வையிட பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என்ற தடை உத்தரவை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியக கட்டுமானப்பணிகள் தீவிரம் பிறந்த நாளான 24-ந் தேதி திறக்க திட்டம்
சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் அருகில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை வருகிற 24-ந் தேதி அவருடைய பிறந்த நாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
4. அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா தாம்பரத்தில், டி.டி.வி.தினகரன் பங்கேற்பு
அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா தாம்பரத்தில், டி.டி.வி.தினகரன் பங்கேற்பு.
5. நீலகிரி காட்டு யானை கொல்லப்பட்ட சம்பவம் விலங்கு வதை சட்டத்தில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரி காட்டு யானை கொல்லப்பட்டதை போன்ற சம்பவங்களைத் தடுக்க விலங்கு வதை சட்டத்தில் திருத்தம் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுத்துவிட்டது.