மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை + "||" + In Tamil Nadu, 14,043 people have been vaccinated against corona in a single day - Health Department

தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

தமிழகத்தில் ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, 

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் 36-வது நாளாக 749 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 43 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 13 ஆயிரத்து 705 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 338 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 332 பேர் முதல்முறையாகவும், 4 ஆயிரத்து 711 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 114 பேருக்கு முதல்முறையாகவும், 45 ஆயிரத்து 594 பேருக்கு இரண்டாவது முறையாகவும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. “ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம்” - தமிழக அரசு அறிவிப்பு
முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
3. தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் மே 14ம் தேதி ரமலான் திருநாள் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு
தமிழகத்தில் மே 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
5. ஜூன் மாதத்திற்குள் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும்: மத்திய அரசு
ஜூன் மாதத்திற்குள் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.