பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 25 Feb 2021 3:32 AM GMT (Updated: 25 Feb 2021 3:32 AM GMT)

பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி புதுச்சேரி நகர்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) புதுவை வருவதை முன்னிட்டு நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story