மாநில செய்திகள்

கோவை வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி வரவேற்பு + "||" + PM Modi who arrived in Coimbatore was welcomed with a gold wrap and a memento

கோவை வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி வரவேற்பு

கோவை வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி வரவேற்பு
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசையும் வழங்கி வரவேற்றனர்.
சென்னை,

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 10.20 மணியளவில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு புறப்பட்டார்.  அங்கு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டார்.

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டார்.  இதற்காக சென்னை வந்த அவர், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை சென்றார்.  கோவையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடியை முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.  பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசையும் வழங்கினர்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன் என்று முதல் அமைச்சர் பழனிசாமி கூறினார்.

இதேபோன்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கோடிக்கணக்கான தமிழ் மக்கள் சார்பாக பிரதமரை வரவேற்கிறேன்.  கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை.  கோவையில் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

இதன்பின்னர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை நமக்கு தருவதற்கு மக்கள் காத்திருக்கிறார்கள்' தொண்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை நமக்கு தருவதற்கு மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும், வெற்றி மாலையை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் சமர்ப்பிப்போம் என்றும் தொண்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளனர்.
2. கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் தொடங்கினார் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று துவக்கினார்.
3. சைதாப்பேட்டையில் தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு, திருநங்கைகள் உற்சாக வரவேற்பு
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். தினசரி காலையில் சராசரியாக 5 மணி நேரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்கிறார்.
4. தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு கே.எஸ்.அழகிரி வரவேற்பு 'ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும்'
தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு கே.எஸ்.அழகிரி வரவேற்பு 'ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும்'.
5. 3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார் கவர்னர் வரவேற்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 3 நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று சென்னை வந்து இறங்கினார்.