மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + Edappadi Palanisamy announces raising the retirement age of government employees to 60 in the Assembly

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுவதாகவும், மே மாதம் 31-ந்தேதி வரை ஓய்வு பெறும் வயது பொருந்தும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

10 ஆயிரத்துக்கும் மேல் பயன்பெறுவார்கள்

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் அது 59 வயதாக உயர்த்தப்பட்டது. இதனால், ஓய்வுபெறும் தருவாயில் இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் பயன்பெற்றனர்.

இந்த நிலையில், அவர்களின் ஓய்வுபெறும் வயது மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அதாவது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது, வரும் மே மாதம் 31-ந்தேதி வரை ஓய்வு பெறும் நிலையில் இருந்த பணியாளர்களுக்கு பொருந்தும்.

இது தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேற்று பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வுபெறும் வயது, 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்.

மே மாதம் வரை பொருந்தும்

இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது மே மாதம் 31-ந்தேதி அன்று பணியில் இருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. பரிசீலனையில் 2,716 மனுக்கள் நிராகரிப்பு: வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது
வேட்புமனுகள் பரிசீலனையில் 2,716 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகிறது.
2. சட்டசபைக்கு முக கவசம் அணியாமல் வந்த இமாசல பிரதேச முதல்-மந்திரி: காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு
இமாசல பிரதேச முதல்-மந்திரி சட்டசபைக்கு முக கவசம் அணியாமல் வந்ததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
3. சட்டசபை தேர்தல்: சீமான் 6 நாள் சூறாவளி பிரசாரம் இன்று தொடங்குகிறார்
சட்டசபை தேர்தல்: சீமான் 6 நாள் சூறாவளி பிரசாரம் இன்று தொடங்குகிறார்.
4. சங்கமேஸ்வர் இடைநீக்க உத்தரவை வாபஸ் பெற வேண்டும்; கர்நாடக சட்டசபையில் சித்தராமையா வலியுறுத்தல்
சங்கமேஸ்வர் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று சட்டசபையில் சித்தராமையா வலியுறுத்தினார்.
5. அத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
அத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின் கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.