மாநில செய்திகள்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு + "||" + Jewelery loan waiver purchased by farmers in co-operative societies in Tamil Nadu Chief Minister Palanisamy's announcement

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 23-ந்தேதி 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று  நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களில் 6 சவரன் வரை அடமானம் வைத்துப் பெறப்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய்யப்படும். அத்துடன் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய வங்கிக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ‘விவசாயிகளை சிலர் குழப்புகிறார்கள்’; மத்திய மந்திரி குற்றச்சாட்டு
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது, இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அழித்து விடும் என்பதாகும்.
3. தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட கலெக்டர் தகவல்
தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
4. புதுக்கோட்டையில் விவசாயிகள் சாலை மறியல்
புதுக்கோட்டையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.