பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + The central government should reduce petrol and diesel prices - Minister Jayakumar
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை வள்ளலார் நகரில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
வடசென்னை மக்கள் மேம்பாட்டிற்காக குறுகிய நாட்களில் தொலைநோக்கு திட்டம் பல எங்கள் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ளது இதன் ஒரு பகுதியாக தான் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரெயில் சேவையை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. மேலும் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததை செய்தியாளர்கள் சுட்டிக் காட்டியதற்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் நிர்வாகம் பேருந்து நிலையத்தை சீரமைத்த தந்துள்ளது.
மாநில அரசிற்கு வரி வருவாய் மூலம் பல இடங்களில் இருந்து வருகிறது. மாநில அரசின் வரி வருவாய் மூலம் என்பது குறைந்த அளவிலேயே இருக்கிறது. இதற்காக மக்களிடம் வரி விதிக்க முடியாது. இதனால் பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைத்து விலையை குறைக்க வேண்டும்.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் விரும்பி ஏற்றுக்கொண்டனர் வரும் தேர்தலில் சசிகலா இல்லாத அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் 2021-ல் ஆட்சி அமைக்கும்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.