தி.மு.க. பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஒத்திவைப்பு; துரைமுருகன் அறிவிப்பு


தி.மு.க. பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஒத்திவைப்பு; துரைமுருகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2021 5:32 PM GMT (Updated: 26 Feb 2021 5:32 PM GMT)

தி.மு.க. பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சென்னை,

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று வெளியிட்ட செய்தியில், தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்ட தேர்தல் நடைபெறும்.  இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்க உள்ளன.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் வருகிற மார்ச் 7ந்தேதி காலை 10 மணிக்கு கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்படுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், தி.மு.க. பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.  கே.என். நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story