போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிலாளர் நல ஆணையம் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Feb 2021 3:01 AM GMT (Updated: 27 Feb 2021 3:07 AM GMT)

மூன்றாவது நாளாக நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு, தொழிலாளர் நல ஆணையம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை, 

ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. 

கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் போரட்டத்தால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பிரதிநிதிகளை தொழிலாளர் நலன் ஆணையம் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. 

இதன்படி சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில், தொழிலாளர் நல ஆணையர் லக்‌ஷ்மிகாந்த் தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

Next Story