தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மீது முறைபடுத்தப்பட்ட தாக்குதல் நடைபெறுகிறது - தூத்துக்குடியில் ராகுல்காந்தி பேச்சு


தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மீது முறைபடுத்தப்பட்ட தாக்குதல் நடைபெறுகிறது - தூத்துக்குடியில் ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 27 Feb 2021 8:57 AM GMT (Updated: 27 Feb 2021 8:57 AM GMT)

தேர்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் சுதந்திரமான பத்திரிக்கைகள் மீது கடந்த 6 ஆண்டுகளாக முறைப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெற்று வருவதாக தூத்துக்குடியில் ராகுல்காந்தி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி தமிழகத்தில் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே நிறைவு செய்துள்ளார். 

முதல்கட்ட பிரசாரத்தில் அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தற்போது அவர் தமிழகத்தில் தனது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார். இதற்காக அவர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றும், நாளையும் ராகுல்காந்தி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். 

குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிற்றார். மார்ச் 1-ந்தேதி குமரி மாவட்டத்தில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில்,  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அந்நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, ’நாட்டை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் சுதந்திரமான கடந்த 6 ஆண்டுகளாக முறைப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஜனநாயகம் உடனடியாக உயிரிழக்காது. அது மெதுவாக உயிரிழக்கும். அமைப்புகளின் சமநிலையை ஆர்.எஸ்.எஸ் அழித்துவிட்டது.

நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் முழு ஆதரவு அளிக்கிறேன். அனைத்து துறையிலும் இந்திய ஆண்கள் தங்களை தாங்கள் எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ அதே கண்ணோட்டத்தில் இந்திய பெண்களையும் பார்க்கவேண்டும்’ என்றார். 

Next Story