மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் + "||" + ADMK may allot 27 Seats to PMK party in Upcoming TN Assembly Election

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல்
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. 

இதற்கிடையில், தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாமக இடையேயான தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

அந்த பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பாமக-வின் நீண்ட கால கோரிக்கையான வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கும்பகோணத்தில் மளிகைப் பொருட்கள் வாங்க ரூ.2 ஆயிரம் போலி டோக்கன்: அமமுக பிரமுகர் மீது வழக்கு
கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மளிகைப் பொருள்களை வாங்குவதற்கான டோக்கன் கொடுத்ததாக அமமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள்வரை, நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது -மு.க.ஸ்டாலின்
வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள்வரை, நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. கோவை : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு
கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
4. தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு- மாவட்டம் வாரியாக அதிகாரப்பூர்வ விவரம்
தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது; மாவட்டம் வாரியாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.
5. தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை