மாநில செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு: ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு + "||" + AIADMK allotment of 23 constituencies to PMK in alliance: O.P.S. announced

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு: ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு:  ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார்.
சென்னை,

தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெறும்.  ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இதனை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமுடன் தொடங்கி உள்ளன.

இதற்கிடையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் முடிவில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.  ஒப்பந்தத்தின்படி பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதால், தொகுதிகளை குறைத்து கொண்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு உயர்வு; ஜார்க்கண்டில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு உயர்வால் ஜார்க்கண்டில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளன.
2. மீனவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு
மீனவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது-மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பேச்சு
3. கொரோனா பாதிப்பு உயர்வு; கர்நாடகாவில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
4. கனடாவின் ஒன்டாரியோவில் 4 வார கால ஊரடங்கு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் 4 வார கால ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என அந்நாட்டு மாகாண தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
5. புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு
9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.