அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Feb 2021 5:23 AM GMT (Updated: 28 Feb 2021 5:23 AM GMT)

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் அறிக்கையின் படி, வேட்பு மனு தாக்கல் மார்ச் 12-ம் தேதி என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19-ம் தேதி என்றும், வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் மார்ச் 20-ம் தேதி என்றும், வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22-ம் தேதி என்றும், வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இதே அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும்.

இந்நிலையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்துகிறார். இதன்படி நாளை நண்பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தேர்தல் வழிமுறைகள் தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார். 

Next Story